சூப்பர் ஸ்டாரன்னா அவர்தான்... நடிகர் சத்யராஜ் அதிரடி !

sathyaraj

சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த தான் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் அடுத்த சுப்பர் ஸ்டார் சர்ச்சை தொடர்ந்து வலுத்து வருகிறது. நீண்ட சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு தூபம் போட்டவர் நடிகர் சரத்குமார். விஜய்யின் 'வாரிசு' படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். 

sathyaraj

சரத்குமாரின் இந்த கருத்திற்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் சர்ச்சை வலுத்து வருகிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் மோதி கொள்கின்றனர். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூற என்றுமே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று கூறி சண்டையிட்டு கொள்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹுக்கும் பாடலும் வெளியாகி அலப்பறையை கூட்டியது.  

இந்நிலையில் நான் தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு வரும்போதே எனக்கு தமிழும் அரைகுறை ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிவிடுவேன்.

நல்ல அப்பாவாக தொடர்ந்து நடித்து வருவது போரடிக்கிறது. அதிலும் ஏதாவது வில்லங்கமாக இருந்தால் நடிக்க தயார். அதேபோல நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இதே போல நடிப்பேன் என சொல்ல முடியாது. வில்லனின் கைகளை இயக்குநர் கட்டிப்போடாமல் இருக்க வேண்டும். ஹீரோக்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் சினிமாவிற்கு நுழைந்த காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகியோரின் ஆதரவு இருந்தது. அப்படி இருந்தால் வில்லனாக நடிப்பது ஒரு சுகமான அனுபவம். இயக்குனர் மணிவண்ணனை போல என்னை மனதில் வைத்து எனக்காகவே கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் இப்போது இல்லை.. காரணம். அவர் சித்தாந்த ரீதியாக எனக்கு ஒரு குருநாதரும் கூட

கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல். ஆனால் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் என்று கூறினார். 

எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன் என அப்போதே முடிவெடுத்தேன். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. ஆண் பெண் பேதம் இல்லை என்பதால் திராவிடர் இயக்கத்தின் பின்னால் நிற்கிறேன். 

நான் பிஸியாக நடித்து வந்த சமயத்தில் படம் இயக்கியதால் 3 படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தேன். அந்த அளவிற்கு வேலைப்பளு இருப்பதாலும், நடிப்பது டூர் போவது போல ஜாலியான விஷயம் என்பதாலும் டைரக்சன் பற்றி இப்போது யோசிக்கவில்லை

சூப்பர் ஸ்டார் என்றாலே கடந்த 45 வருடமாக ரஜினி சார் தான் ஞாபகத்திற்கு வருகிறார்.. அதை மாற்றக்கூடாது.. என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார்.. ஏழிசை மன்னர், மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கேற்ப பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் தான் சொந்தமானவர். ரஜினி சாரை மக்கள் திலகம் என்றால் ஏற்றுக் கொள்வார்களா ? தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்ததால் அவரை நடிகர் திலகம் என்று கூற முடியுமா ? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த்.. உலக நாயகன் என்றால் கமல்.. தளபதி என்றால் விஜய்.. தல என்றால் அஜித்” என சமீப காலமாகவே ஓடிகொண்டிருந் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் சத்யராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 

Share this story