சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சத்யராஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘தீர்ப்பு விற்கப்படும்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள இப்படத்தை ஹனி பீ கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. எஸ்.என்.பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை ஆஞ்சு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்களுக்காக போராடும் சமூக போராளியாக இப்படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் ரிலீசுக்கு தயாரானது. ஆனால் சில காரணங்களால் இப்படம் வெளியாகாமல் அப்படியே கிடப்பில் இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

