சத்யராஜ் நடித்துள்ள தோழர் சேகுவாரா... கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு...
1696325850687

சத்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் தோழர் சேகுவாரா படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
90-களில் முன்னணி நாயகராக இருந்த சத்யராஜ், தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெப்பன் என்ற திரைப்படம் உருவானது. இந்நிலையில், தோழர் சேகுவாரா என்ற படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அலெக்ஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இதில், சத்யராஜூடன் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.