சத்யராஜ் தாயார் மறைவு... முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல்
1694083458732
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து அவரது தாயார் நாதாம்பாள் மறைவிற்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

