"விடாமுயற்சி" படத்தின் 'சவதீகா' வீடியோ பாடல் வெளியானது

’விடாமுயற்சி' திரைப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் அஜித். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வசூல் செய்துள்ளது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
And we go SAWADEEKA 😍🥳
— Sony Music South India (@SonyMusicSouth) February 21, 2025
➡️https://t.co/KteP6iLgGA
Tune int to the video RIGHT NOW ❤️🔥#Vidaamuyarchi pic.twitter.com/LpEQ8weulg
இப்படத்தின் முதல் பாடலான 'சவதீகா' வெளியாகி வைரலாகின. சவதீகா பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் `சவதீகா' பாடலின் ரீலோடட் வெர்ஷனை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியது. இந்த பாடலை அனிXஆண்டோ வெர்ஷன் என அறிவித்த படக்குழு, இதனை ப்யூர் வைப் மெட்டீரியல் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் 'சவதீகா' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.