‘சவுக்கு சங்கர்' வாழ்க்கை படத்தில், வெற்றிமாறனுடன் கூட்டணி வைக்கப்போவது யார் தெரியுமா?

photo

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் வாழ்க்கை  திரைப்படமாக தயராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை பிரபல இயக்குநரான வெற்றிமாறன் இயக்க உள்ளாராம். அதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராகவும் பிசியான இயக்குநராகவும் வலம் வரும் வெற்றிமாறன், தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இப்படி அடுத்தடுத்து ப்ராஜெக்டுகளை கைவசம் வைத்துள்ளார் வெற்றிமாறன். அடிக்கடி அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் கருத்துகளை கூறி சர்சையில்  சிக்கிக்கொள்ளும் சவுக்கு சங்கரின் வாழ்கையை படமாக எடுக்க போவதாகவும், அதில்  தனுஷ் சவுக்கு சங்கராக நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

இதற்கு முன்னர் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி போட்ட படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த தகவலை சவுக்கு ஷங்கரே ஒரு பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story