'நோ கட்டவுட்…. நோ பால் அபிஷேகம்'- 'தளபதி விஜய்' ரசிகர்களின் புது முயற்சி.

photo

தளபதி விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தளபதிக்கு கட்டவுட் வைக்கவோ… பால் அபிஷேகம் செய்யவோ மாட்டோம் என்று வட சென்னை தளபதி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

photo

திருவிழாக்கள், விசேஷங்கள், பட ரிலீஸ், அரசியல் கட்சி கூட்டங்கள் என எந்த நிகழ்வாக இருந்தாலும் கட்டவுட் வைப்பது கலாச்சாரமாகவே மாறியுள்ளது. இதனை செய்ய வேண்டாம் என நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எவ்வளவு கூறினாலும் இந்த கலாச்சாரம் ஒழிந்தபாடில்லை. இது போன்று கட்டவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வதால் விபத்துகள், பணவிரையம், பொருட்கள் வீணாவது இது தவிர எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் வட சென்னை தளபதி ரசிகர்கள் புது முயற்சியாக வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்துக்கு கட்டவுட் வைக்கவோ… பால் அபிஷேகம் செய்யவோ மாட்டோம் என முடிவெடுத்துள்ளனர்.

photo

அதற்கு பதிலாக ஏழை எலிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உள்ளனர், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு படிக்க தேவையான உபகரணங்கள் வழங்க உள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட ‘லியோ’ சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ராயபுரம் விஜய் ரசிகர்கள், அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி, மாண்வர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story