பர்த் மார்க் படத்திலிருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ்

பர்த் மார்க் படத்திலிருந்து இரண்டாவது பாடல் ரிலீஸ்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷபீர் கல்லராக்கல். அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’. இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மிர்னா நடித்துள்ளார். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகம் மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற அழகிய மலை கிராமத்தில் நடைபெற்று முடிந்தது

இந்நிலையில், பர்த் மார்க் படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this story