லோகெஷ் பகிர்ந்த சீக்ரெட் : வெப் சீரிஸாகும் ஏஜெண்ட் டீனாவின் கதை..!
1754526608000
"கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்க அந்த படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதற்கிடையில் லோகேஷ் தன்னுடைய கதாபாத்திரங்களைக் கொண்டு LCU எனும் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கி வருகிறார். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்களைக் கொண்டு தனித்தனி படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படி விக்ரம் படத்தில் இடம்பெற்று ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட ‘ஏஜெண்ட் டீனா’ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு வெப் சீரிஸை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சீரிஸுக்கான கதையை அவர் எழுத மற்றொரு இயக்குனர் இயக்குவார் என தெரிவித்துள்ளார்.

