அமரன் திரைப்படத்தை பாராட்டிய சீமான்

amaran

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.

seeman

இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் படக்குழுவை   பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் அமரன் திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Share this story