இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு, சீமான் பிறந்தநாள் வாழ்த்து

seeman
“அன்புத்தம்பி பிரதீப் ரங்கநாதனுக்கு என் உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் சீமான் தெரிவித்துள்ளதாவது; “புதுமையான திரைக்கதையாலும், உணர்வுமிகுந்த வசனங்களாலும், இயல்பான நகைச்சுவை காட்சிகளாலும் அனைத்துத் தரப்பு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இளம் இயக்குநர்! அதே பாணியில், தளராத தன்னம்பிக்கையின் சான்றாகத் தன்னையே கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி, தனது இயல்பான துடிப்புமிகு நடிப்பால் அனைவரையும் ரசிக்கவைத்த ‘லவ் டுடே’ எனும் மிகப்பெரிய வெற்றிப் படத்தைத் தந்த தமிழ்த் திரையுலகின் புதிய நம்பிக்கை ! Pradeep

அன்புத்தம்பி பிரதீப் ரங்கநாதனுக்கு என் உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இயக்குநராகவும், நடிகராகவும் மேலும் பல மனதிற்கு இனிய படைப்புகளைத் தந்து, மாபெரும் வெற்றிகளையும், உயரங்களையும் எட்ட தம்பியை உளமார வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீமானுக்கு பிரதீப் நன்றி தெரிவித்துள்ளார்.
 


 

Share this story