சூர்யா ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’ பட விழா -துபாயில் நடந்த சம்பவம்
சூர்யா ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’ என்ற தமிழ் மற்றும் மலையாள படத்துக்கான நிகழ்ச்சி துபாயில் நடந்தது. அப்போது தோள்பட்டை தெரியும்படியான நவீன ஆலிவ் பச்சை நிற ஆடையில் நஸ்ரியா பங்கேற்றார். திரையில் குடும்பப்பாங்காக தோன்றும் நஸ்ரியாவின் திடீர் கவர்ச்சி தோற்றத்தை கண்ட சிலர், அதிர்ச்சியடைந்தனர். நஸ்ரியாவின் போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தன்னை பற்றிய ட்ரோல்களுக்கும், விமர்சனங்களுக்கும் அஞ்சாத நஸ்ரியா, அதே உடையில் தோன்றிய ேபாட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்களும், ரசிகர்களும், ‘ஒரு பெண்ணின் ஆடை தேர்வு என்பது முற்றிலும் அவரது தனிப்பட்ட சுதந்திரம். தனது அனுமதியின்றி காட்சிகளில் மாற்று நபரை பயன்படுத்துவதை எதிர்ப்பதும், சொந்த விருப்பப்படி பொதுவெளியில் ஆடை அணிவதும் ஒன்றல்ல’ என்று, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

