மாறுபட்ட குணங்கள் கொண்ட கேரக்டரில் சூர்யா நடித்துள்ள சீன் பட விமர்சனம்

surya

சென்னையில் சைக்கோவின் தொடர்ச்சியான கொலைகள் வழக்கு போலீஸ் அதிகாரி சூர்யாவிடம் வருகிறது. இக்கொலைகளை சீரியல் கில்லர் நஸ்லென் துல்லியமாக நடத்துவதை சூர்யாவும், அவரது ‘கண்களாக’ செயல்படும் நஸ்ரியாவும் எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பது மீதி கதை. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, கமர்ஷியல் ஹீரோ என்ற இமேஜை அடித்து நொறுக்கி, மாறுபட்ட குணங்கள் கொண்ட கேரக்டரில் சூர்யா அதிரிபுதிரியாக நடித்துள்ளார். அவரது பாடிலாங்குவேஜ், மேனரிசங்கள், வசனங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றன. அவரிடம் பணியாற்றும் நஸ்ரியாவும் இயல்பான நடிப்பில் இதயத்தை கவர்கிறார். பசுத்தோல் போர்த்திய புலி கேரக்டரில் நஸ்லென் கே.கஃபூர் அசத்தியிருக்கிறார். சூர்யாவின் தந்தை ஆனந்தராஜ், அம்மா மற்றும் லால், கஜராஜ், ராஜ்பிரியன் உள்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

இதுபோன்ற கதையை தேர்வு செய்து, ஒவ்வொரு கேரக்டருக்கும் தனித்துவமான வடிவமைப்பை கொடுத்து இயக்கியுள்ள ஜித்து மாதவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள். சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை, படத்தின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளது. வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. அஜ்மல் சாபுவின் எடிட்டிங் கச்சிதம்.

Share this story