சீனு ராமசாமியின் கோழிப்பண்ணை செல்லதுரை டிரைலர் வெளியானது

Kozhipannai chella durai

தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை,தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும். மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக கோழிப்பண்னை செல்லதுரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு, பிரிகிடா சகா, மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை ஜோ திரைப்படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்கையை வளர்க்க அண்ணன் கஷ்டப்படுகிறார், கிடைக்கும் எல்லா வேலைகளை செய்கிறார் போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது . திரைப்படம் மிகவும் எமோஷனலாக இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story