சர்வதேச அங்கீகாரம் – சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்ற “சீதா ராமம்”.

photo

 துல்கர் சல்மான் மற்றும்  முருனாள் தாகூர் இணைந்து நடித்து பிளாக் பஸ்டரான திரைப்படம் ‘சீதா ராமம்’. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த  படம் தற்போது சர்வதேச அளவில்  சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

photo

இறுதியில் இந்த காதலர்கள் எப்படியாவது ஒன்று சேர்ந்துவிட மாட்டார்களா என ஒட்டு மொத்த ரசிகர்களும் காத்திருந்த சமயத்தில் “ இந்த ஜென்மத்திற்கு விடைபெறுகிறேன்” என வந்த ராம்-ன் கடிதம் காண்போர் கண்களை குளமாக்கியது. படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நல்ல விமரசனம், வசுலை கடந்து படம் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்ஃபொர்ன் நகரில் நடந்த 14வது இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட பிரிவில் ‘சீதா ராமன்’ படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் படக்குழு உட்பட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.  

Share this story