‘சீதாராமம்’ இயக்குனர் கூட்டணி சூர்யா.. மாஸான உருவாகிறது புதிய படம் !

suriya

'சீதாராமம்' படத்தின் இயக்குனருடன் சூர்யா கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்'சூர்யா நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து சுதா கொங்கரா,  ‌‌‌‌‌‌‌‌‌‌பிரத்விராஜ் ஆகியோர் படங்களில் நடிக்க உள்ளார்.‌

suriya

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சூர்யாவை சந்தித்த இயக்குனர், ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை சூர்யாவிற்கு பிடித்ததால் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் கூறப்படுகிறது. திரையுலகில் இந்த கூட்டணி இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

suriya

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'சீதாராமம்'. இந்த படத்தை ஹனு ராகவப்புடி இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹனு ராக்வபுடி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story