ஜி.வி.பிரகாஷ் பட தயாரிப்பாளருக்கு திருமணம்.. வைரல் புகைப்படங்கள் !

gunanithi wedding

 ஜி.வி.பிரகாஷின் ‘செல்ஃபி’ படத்தின் தயாரிப்பாளர் குணாநிதி திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

gunanithi wedding

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராக வலம் வருபவர் குணாநிதி. பல முன்னணி ஹீரோக்களை வைத்து தனது டிஜி பிலிம் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதோடு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  

gunanithi wedding

தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி படத்தை தயாரித்துள்ளார். மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குணாநிதி நடிகராகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

gunanithi wedding

இந்நிலையில் தயாரிப்பாளர் குணாநிதி, சஹானா என்ற பெண்ணை கரம்பிடித்தார். இந்த திருமணம் இன்று வைதீக முறைப்படி திருப்பதியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அன்புமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

Share this story