செல்வராகவனின் மிரட்டலான நடிப்பில் 'பகாசூரன்'.. ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

bakasuran

 செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள 'பகாசூரன்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

 பிரபல இயக்குனராக செல்வராகவன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நட்ராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

bakasuran

'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

bakasuran

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஸ்னீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மிரட்டலான நடிப்பை செல்வராகவன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஸ்னீக் பீக் காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story