ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்த தனுஷின் அண்ணன்- எந்த படத்தில் தெரியுமா?

photo

பிரபல இயக்குநரான செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

தமிழ் சினிமாவில் ‘3’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த. கவுதம் கார்த்திக்கின் வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார். அதுமட்டுமல்லாமல்  பல ஆல்பம் பாடல்களையும் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம்’. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

photo

இந்த நிலையில் படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதையை செல்வராகவனிடன் கூறியதும் அவே ஓகே கூறிவிட்டாராம். விரைவில் அவரும் படப்பிடிப்பில் இணைய உள்ளாராம். இந்த தகவ்ல் செல்வராகவின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

 

Share this story