கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் அறிமுகமாகும் ‘செல்வராகவன்’.

photo

கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வந்த செல்வராகவன், சிறந்த நடிகராகவும் உள்ளார். இந்த நிலையில் தற்போதைய  லேட்டஸ்ட் தகவலாக செல்வராகவன் கோலிவுட்டை கடந்து டோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளாராம்.

photo

செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிக்கும்  காம்போ என்றாலே தனி மவுசு உண்டு அந்த அளவிற்கு சிறந்த படங்களை இருவரும் கொடுத்துள்ளனர். அவர்களது கூட்டணியில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். தொடர்ந்து படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் செல்வராகவன் கடைசியாக பகாசூரன், பர்ஹானா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்து இயக்குநர் கோபிசந்த் மாலினோனி மற்றும் ரவி தேஜா கூட்டணி போடும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளாராம்.


 

அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this story