மாறுப்பட்ட தோற்றத்தில் நடிக்கும் செல்வராகவன்... சத்தமில்லாமல் நடைபெறும் ஷூட்டிங் !

selvaraghavan

இயக்குனர் செல்வராகவன் சத்தமில்லாமல் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது ரசிகர் அவதாரம் எடுத்துள்ள அவர் பிசியாக நடித்து வருகிறார். 

selvaraghavan

ஏற்கனவே சாணிக் காயிதம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

selvaraghavan

இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுனில், யோகிபாபு, மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதோடு பிரபல இயக்குனர் ராஜூவ் மேனனின் மகள் சரஸ்வதி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

தென்னிந்திய அரசியலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story