15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாகிறது செல்வராகவனின் "ஆயிரத்தில் ஒருவன்"

ayirathil oruvan


செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது. 

கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் இணைந்து நடித்து தமிழில் வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.  இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழில் வெற்றி பெறவில்லை. ஆனால், அதன் பின் சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடினர்.  இப்படம் 'யுகந்நிக்கி ஒக்கடு' எனும் பெயரில் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளியாகி  யாரும் எதிர்பாராத விதமாக மாபெரும் படமாக அமைந்தது.


இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கு பதிப்பில் வருகின்ற மார்ச் 14ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மற்றும் அமெரிக்கா நாட்டிலும் ரீ ரிலீஸ் செய்வதக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story