கோவை சரளாவின் ‘செம்பி’ ஸ்னீக் பீக் காட்சி – யதார்த்தமான படைப்பு.

photo

கும்கி, மைனா படங்களை இயக்கி பிரபலமான  பிரபு சாலமன் இயக்கத்தில்செம்பிஉருவாகியுள்ளது. இதில் கோவை சரளா முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இவருடன் இணைந்து தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர்ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனஇந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.

photo

இந்த நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் கோவைசரளா மற்றும் படத்தில் அவரது பேத்தியாக நடித்துள்ள சிறுமி, இருவருக்கும் இடையிலான காட்சிகள் இடம் பெறுள்ளது.

photo

மலைவாழ்  மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக கண் முன்னே காட்டியிருக்கும் பிரபுசாலமனின்  இந்த படைப்பு ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்னீக்பீக் காட்சி அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share this story