நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் சேர்ந்து செந்தில், கோவை சரளா-என்ன படம் தெரியுமா ?

kovai sarala

திரையுலகில் 50 வருடங்களை கடந்துள்ள இளையராஜாவுடன் ராமராஜன் இணைந்துள்ள 25வது படம், ‘கடவுள் தந்த பரிசு’. இதை காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். காமெடி பகுதிக்கான வசனங்களை எழுதும் ராஜகோபால், எம்.அடைக்கலத்துடன் இணைந்து படத்துக்கான வசனங்களையும் எழுதுகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் சேர்ந்து செந்தில், கோவை சரளா காமெடியில் கலக்க இருக்கின்றனர்.
இளையராஜா, ராம ராஜன் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது இந்த படத்துக்கான பாடல் பதிவு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this story