"என் படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள்" -இப்படி கூறும் இயக்குனர் யார் தெரியுமா ?

Cheran capsized money minded people for the debacle of Rajavukku Check
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான சேரன் கூறியது: நான் யாரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன். என்னுடைய படத்தில் வில்லனே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வில்லன்களை விரும்புவதில்லை. நான் வில்லனாகவும் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய வாழ்க்கை முறை. எனக்கு வாழ்க்கையில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. கடன் நிறைய இருக்கிறது. படம் எடுக்க முடியவில்லை. படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. கதை சொல்வதற்கு போனால் ஹீரோக்கள் கதை கேட்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி நிறையப் பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் நான் நிம்மதியாக தூங்குகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் என்னவென்றால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டேன். எல்லாவற்றையும் கடக்கும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. எல்லோரையும் நேசியுங்கள். சிரித்த முகத்துடன் அன்பாக பேசுங்கள். எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடும். இவ்வாறு சேரன் பேசியிருக்கிறார்

Share this story