‘அகோரி’ படத்தில் அறிமுகமாகும் சீரியல் நடிகர்.

photo

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர்  சித்து. இவர் திருமணம், ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவர் தற்போது வெள்ளித்திரைக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

photo

அந்த படத்திற்கு அகோரி என பெயரிட்டுள்ளனர். படத்தை மோஷன் பிலிம் பிக்சர்ஸ்  மூலமாக சுரேஷ் என். மோகன் தயாரிக்க அறிமுக இயக்குநரான டி.எஸ். ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹரித்துவார் போல பிரம்மாண்ட் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது. படம் இம்மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story