பாலியல் புகார்.. தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்
1726651321837
ஆந்திர மாநில திரைப்பட நடனக் கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடன இயக்குநர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடனக் கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அளித்திருந்தார். இதனையடுத்து தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.