‘வாரிசு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணைந்த ஷாம் !

shaam

 விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் ஷாம் புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோக்களில் ஒருவர் ஷாம். ‘12 பி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்க்கு அண்ணாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

shaam

இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். 

shaam

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகளை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து வரும் விஜய் மில்டன், கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story