’‘லெஜண்ட்’ சரவணன் படத்தில் ஷாம், ஆண்ட்ரியா - ஏப்ரல் ரிலீஸ்!
‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் புதிய படத்தில் ஷாம், ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
‘எதிர் நீச்சல்’, ‘கொடி’, ‘காக்கிச் சட்டை’, ‘கருடன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் துரை செந்தில்குமார் அடுத்து ‘லெஜண்ட்’ சரவணனை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தை ‘தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளதுஇந்நிலையில், இப்படத்தில் ‘லெஜண்ட்’ சரவணனுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கிறார். நடிகர்கள் ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.