வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்த நடிகர் ஷாருக்கான்...!

shah ruk

மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த 'மன்னத்'  வீட்டில் இருந்து நடிகர் ஷாருக்கான் வாடகை வீட்டிற்கு  குடியேரி உள்ளார். 

பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு மும்பை மன்னாட்டில் மிகப் பிரம்மாண்டமான வீடு உள்ளது. ஆனால் அவர் இந்த வீட்டை சீரமைப்பதற்காக நீண்ட நாட்களாகவே திட்டமிட்டு வந்தார். அந்த வகையில் வரும் மே மாதம் முதல் மராமத்து பணிகள் துவங்க இருக்கின்றன. இதனை தொடர்ந்து தற்போது பாந்த்ரா பகுதியில் உள்ள புதிய அபார்ட்மெண்ட் ஒன்றுக்கு குடிபெயர்ந்துள்ளார் ஷாருக்கான்.shah ruk

இந்த அப்பார்ட்மெண்டில் நான்கு தளங்களை மொத்தமாக ஷாருக்கான் வாடகைக்கு எடுத்துள்ளார். நான்கு தளங்களுக்கும் சேர்த்து மாத வாடகை 24 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தானும் தனது குடும்பமும் தவிர தனது பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் அனைவரும் தங்குவதற்கும் இந்த நான்கு தளங்களில் ஏற்பாடுகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம் ஷாருக்கான்.

Share this story