'முபாசா: தி லயன் கிங்' : ஷாருக்கான் டப்பிங் வீடியோ வெளியீடு
இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 -ம் ஆண்டில் ஒன்றும், 2019-ம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.இந்த இரண்டிலும் ஒரே கதைதான். 1994-ம் ஆண்டு வெளிவந்தப் படம் கார்டூன் டெக்னாலஜியில் இருக்கும், 2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புது டெக்னாலஜியான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கும்.லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது. பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டு விலங்குகளின் மூலம் காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும்.
சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து முபாசா : தி லயன் கிங் படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. காட்டுக்கே ராஜாவான முபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.'முபாசா: தி லயன் கிங்' திரைப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைக்கு வரவுள்ளது.
Ek Baadshah ki kahani, Baadshah ki zubaani 🦁
— Walt Disney Studios India (@DisneyStudiosIN) November 27, 2024
Watch Disney's Mufasa: The Lion King in cinemas from 20th December 🍿#DisneyIndia #ShahRukhKhan #Mufasa #TheLionKing pic.twitter.com/hnyl4eD4bp
இதில், இந்தி வெர்ஷனுக்காக ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர்.தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முபாசாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.முபாசா கதாபாத்திரத்துக்கு ஷாருக்கான் இந்தியில் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.