இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான்...!
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக தனது முத்திரையை பதித்தவர் ஷாருக் கான். கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் 1000 கோடி வசூலை கடந்து ஷாருக் கானுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் ஷாருக் கானின் 27 வயது மகன் ஆர்யன் கான் திரையுலகில் இயக்குனராக கால் பாதிக்க உள்ளார். பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெப் தொடர் ஒன்றை ஆரியன் கான் எழுதி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் அடுத்த வருடமே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் தொடரை ஷாருக் கான் அவரது மனைவி கவுரி கான் இணைந்து நடத்தும் ரெட் சில்லிஸ்நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
Witness Bollywood like never before… on Netflix! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 19, 2024
Presenting Aryan Khan’s directorial debut in an all-new series, coming soon!@gaurikhan @iamsrk #AryanKhan @RedChilliesEnt @NetflixIndia pic.twitter.com/UMGTb5FVGI
இதன் மூலம் ரெட் சில்லிஸ் - நெட்பிளிக்ஸ் உடன் 6-வது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்சக், கிளாஸ் ஆப் 83, பேட்டல், பார்ட் ஆப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. -முன்னதாக ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான் நெட்பிளிக்ஸில் ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்சிஸ் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.