‘மிக்க நன்றி நண்பா.. இதனால தான் நீங்க தளபதி’.. விஜய்க்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் !

shahrukh khan

‘பதான்’ டிரெய்லரை வெளியிட்ட விஜய்க்கு நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜான் ஆப்ரகாம், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. 

shahrukh khan

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதன் தமிழ் டிரெய்லர் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பொதுவாக வேறு எந்த படத்தின் அப்டேட்டையும் விஜய் வெளியிடாத நிலையில் ‘பதான்’ படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டிருந்தது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. 

shahrukh khan

இந்நிலையில் ‘பதான்’ டிரெய்லரை வெளியிட்டிருந்த நடிகர் விஜய்க்கு ஷாருக்கான் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘மிக்க நன்றி தலைவா ; இதனால் தான் நீங்க தளபதி’. கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம். லவ் யூ என்று குறிபிட்டுள்ளார். 

இதற்கிடையே ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது ஷாருக்கானும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அதேநேரம் ‘ஜவான்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 


 

Share this story