‘ஜவான்’ நல்லா ஓடனும் சாமி……- திருப்பதிக்கு விசிட் அடித்த ஷாருக் ஜி, நயன்தாரா.

photo

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் தயாராகியுள்ள ‘ஜவான் ‘ படம் விரைவில் ரிலீஸ்ஸாக உள்ள நிலையில், ஜவான் படக்குழு திடீரென திருப்பதிக்கு விசிட்டடித்துள்ளனர்.

photo

பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படம் மூலமாக கோலிவுட்டில் இயக்குநராக கால் பதித்தார். தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த முன்னணி இயக்குநரானார். தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ இயக்கப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


இந்த படம் மூலமாக நயன்தாரா பாலிவுட்டில் கால் பதிக்கிறார். தொடந்து அனிருத் இசையமைக்கும் ஜவான் படத்தில் யோகிபாபு, பிரியாமணி, பிரியங்கா சோப்ரா, விஜய் சேதுபதி என முன்னணி நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். படம்  நாளை மறுநாள் தியேட்டரில் ரிலீஸ்ஸாக உள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் அவரது மகள் சுஹானா, நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திடீரென திருப்பதிக்கு சென்று சாமிதரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story