‘அந்த இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்…’- ஓபனாக பேசிய ஷகீலா.

photo

நடிகை விசித்ரா தனக்கு படப்பிடிப்பு சமயத்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியதை தொடர்ந்து தற்போது கவர்ச்சி நடிகை ஷகீலாவும் தன்னை பிரபல இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

photo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா தன்னை பிரபல நடிகர் படுக்கைக்கு அழைத்த விஷயத்தை கூறினார். ஆனால் யார் அவர் என்பதை கூறவில்லை. இந்த விவகாரம் குறித்து பேசிய ஷகீலா “ விசித்ரா எனது தோழிதான், அவருக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியதை நான் வரவேற்கிறேன். ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் கூறியிருக்க வேண்டும். இது போல எனக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

photo நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல போராட்டங்களை சந்தித்தேன். அப்போது தெலுங்கு திரையுலகில் அல்லரி நரேஷின் தந்தையும், எழுத்தாளரும், இயக்குநருமான ஈ.வி.வி சத்தியநாராயணா அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால் நான் தற்போது உங்கள் படத்தில் நடித்ததற்கு எனக்கு சம்பளம் வந்துவிட்டது. அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டாம் என்று கூறிவிட்டேன். தற்போது அவர் உயிருடன் இல்லை, என்றாலும் இது நடந்தது உண்மை” என தெரிவித்துள்லார்.

Share this story