அடக்கடவுளே!..... பார்சலில் வந்த ஷாலு ஷம்முவின் போன்… நண்பர் செய்த செயலை பாருங்க.

photo

 நடிகை ஷாலு ஷம்மு சமீபத்தில் தனது 2லட்சம் மதிப்புடைய செல்போனை யாரோ திருடிவிட்டதாகவும், சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் அது பார்சலில் வீடுவந்து சேர்ந்துள்ளதாக பதிவின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார்.

photo

வருத்தபடாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் ஷாலுஷம்மு.  அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

photo

இந்த நிலையில் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று  எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, அதிகாலையில் சூளைமேட்டில் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார். அன்று காலை எழுந்து பார்த்த போது தனதுப் 2 லட்ச ரூபாய் மதிப்புடைய IPhone 14 Pro Max  செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார் உடனடியாக அதுகுறித்து ஷாலு ஷம்மு பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், புகாரில் தனது சில நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசாரும் அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் ஷாலுவுக்கு டன்சோவில் ஒரு பார்சல் வந்துள்ளது. அந்த பார்ச்சலில் காணாமல் போன அவரது செல்போன் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாலு சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் செல்போன் கிடைத்துவிட்டது என்றும், தான் சந்தேகப்பட்ட நண்பர்தான் இந்த விஷயத்தை செய்ததாகவும் எட்டு வருட நட்பு வீணாய்போனதாக பகிர்ந்துள்ளார்.

Share this story