ஷேன் நிகாம் நடித்த ‘மெட்ராஸ்காரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

madraskaran

ஷேன் நிகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ்காரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷேன் நிகாம். இவர் தமிழில் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் மெட்ராஸ்காரன் எனும் திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷேன் நிகாமுடன் இணைந்து கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, நிஹாரிகா பாண்டியராஜன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்க பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார்.

madraskaran

ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரு சிறிய ஈகோவால் ஒருவனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாகக் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story