ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் 'கேம் சேஞ்சர்'.. டீசர் வெளியீட்டு விழா அறிவிப்பு
1730806512000
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாகத் தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் பான் இந்தியா படம் என்பதால் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது கேம் சேஞ்சர் படக்குழு வெளியிட்டுள்ளது.
The Command Begins From Nov 9th in the heartland of India ❤️🔥💥#GameChangerTeaser Grand Launch In Lucknow, UP 🔥#GameChanger In Cinemas From 10th Jan, 2025 ✊🏼 pic.twitter.com/rKwvxIHuzh
— Game Changer (@GameChangerOffl) November 5, 2024