என்னாது... ஷங்கர் இயக்கத்தில் விஜய்யா ?... மீண்டும் இணையும் ‘நண்பன்’ கூட்டணி !

vijay

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட்டில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

vijay

இதற்கிடையே நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதால் மூன்று வரும் நடிப்புக்கு பிரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நண்பன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது. 

vijay

விஜய்யின் 70வது படமாக உருவாகும் இந்த படம் அரசியல் த்ரில்லர் படமாக உருவாகிறது. ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களின் பணிகள் நிறைவுபெற்ற பிறகு இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகளை ஷங்கர் தொடங்கவுள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

Share this story