‘இந்தியன் 2’ ஷூட்டிங் முடிக்கும் ஷங்கர்... அடுத்து ‘கேம் சேஞ்சர்’ தான்!

indian 2

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் ‘கேம் சேஞ்சர்‘ ர்படத்தின் படப்பிடிப்பை ஷங்கர் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார். தற்போது கமலஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளை கவனித்து வருகிறார். அந்த வகையில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

indian 2

பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றிருந்தனர். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஷங்கர், இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார். 

இந்த படத்தின் தென் ஆப்ரிக்கா படப்பிடிப்பை இன்னும் சில நாட்களில் ஷங்கர் நிறைவு செய்யவுள்ளார். அதன்பிறகு இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும் ஷங்கர், வரும் 23-ஆம் தேதி ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார். ஐதராபாத்தில் தொங்கும் இந்த படப்பிடிப்பில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story