ராம் சரண் படத்தை முடித்த ஷங்கர்.. அடுத்த என்ன தெரியுமா ?

Shankar

ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' படத்தை முடித்துள்ள நிலையில் உடனடியாக  'இந்தியன் 2' படத்தை இயக்குனர் ஷங்கர் தொடங்கியுள்ளார்.

பிரபல இயக்குனரான ஷங்கர் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தையும், தமிழில் 'இந்தியன் 2', படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் மாறிமாறி ஷங்கர் பணியாற்றி வரும் நிலையில் பலக்கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

Shankar

இ‌ந்நிலையில் ராம் சரணின் நடிப்பில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. ராம் சரண் நடிக்கும் இறுதிக்கட்ட காட்சிகளை ஷங்கர் படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் 'கேம் சேஞ்சர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து உடனடியாக இன்று முதல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.‌ 'இந்தியன்' படத்தின் வெற்றிக்கு பிறகு 27 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2' உருவாகி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் பணிகளும் விரைவில் நிறைவுபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story