வேள் பாரி காப்புரிமை - பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஷங்கர்
1727021865102
ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து ஷங்கர் ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 ஆகிய திரைப்படங்களில் இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் " பல திரைப்படங்களில் சு.வெங்கடேசனின் "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவலின் முக்கிய காட்சிகள் திருடப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதை கண்டு, அந்த நாவலின் உரிமத்தைப் பெற்றவனாக கலக்கமடைகிறேன். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் நாவலின் முக்கியமான காட்சியைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். திரைப்படங்கள். வெப் சீரிஸ் என எதிலும் நாவலின் காட்சிகளை பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்கவும். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிடும்" என கூறியுள்ளார்.