‘RC15’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியிட்ட ஷங்கர்…. 'இந்தியன்2' வருமா? வராதா?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன்2 திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு பல தடைகளை கடந்து மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வந்தது. அதே போன்று ராம்சரணின் 15வது திரைப்படத்தையும் ஷங்கர் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார்.
அதாவது, ஒரு படத்திற்கு 12நாட்கள் என மாதத்தில் நாட்களை பிரித்து வேலை செய்கிறார். அதன்படி கடந்த தினங்களில் இயக்குநர் சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிசியாக இருந்தார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Commencing the next schedule of #RC15 at the iconic Charminar pic.twitter.com/uubP5P0aV1
— Shankar Shanmugham (@shankarshanmugh) February 9, 2023
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கும் ராம்சரணின் RC15 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிவிட்டதாக ஹைதரபாத்தில் உள்ள சார்மினார் பகுதியிலுருந்து புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள், இந்தியன் 2 படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் மீது இவ்வளவு ஆர்வம் எழ காரணம் முதல் பாகத்தின் வெற்றிதான்.