ரூ.15 கோடி இழப்பை சந்தித்த ஷங்கர்.... பாட்டு லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி...

ரூ.15 கோடி இழப்பை சந்தித்த ஷங்கர்.... பாட்டு லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி...

கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், பட வெளியீட்டிற்கு முன்பே சமூக வலைதளங்களில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாலிருட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெற்றுள்ள ஜாபிலம்மா என்ற பாடல் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாடல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Share this story