பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் ஷங்கர் மகன்... ?

shankar

பிரபுதேவா இயக்கத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட  இயக்குநர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஆனால், இவருடைய இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகியவை பெரும் தோல்வியை தழுவின. இதனிடையே, தற்போது இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். ‘இந்தியன் 2’ விழாவில் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு நடனமாடி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் அர்ஜித். 

prabudeva
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் அர்ஜித். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளார்கள்.  இந்நிலையில்,  தற்போது கிடைத்துள்ள தகவல்படி அர்ஜித் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும்,  தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் மமிதா பைஜு அர்ஜித்திற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story