இயக்குநரா? ஹீரோவா? குழப்பத்தில் ஷங்கர் மகன்..

Shankar son

இந்திய சினிமாவையே தனது பிரம்மாண்ட படங்கள் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குநர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தில் ஆரம்பித்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 என பல படங்களை இயக்கியுள்ள ஷங்கர் அடுத்ததாக தனது மகனையும் சினிமாவில் களமிறக்கப் போவதாக அறிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமாகி அடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அடுத்ததாக அதர்வா தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடித்து வரும் நேசிப்பாயா படத்திலும் அர்ஜுன் தாஸுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார்

arjith shankar
இந்நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர்,  அக்கா ஐஸ்வர்யாவின் திருமணத்தில் ரன்வீர் சிங் மற்றும் அட்லீயுடன் நடனமாடினார். இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். அடுத்து அவரும் சினிமாவில் அறிமுகமாக காத்திருக்கிறார். தனது மகன் அர்ஜித் ஷங்கரை சினிமாவுக்குத் தந்து விட்டதாகவும், அவர் ஹீரோவாக விரும்புகிறாரா? அல்லது இயக்குநராக போகிறாரா? என்பது தெரியவில்லை என்றும் அவருக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் ஷங்கர் கூறியுள்ளார்.

shankar
மகள் அதிதி ஷங்கருக்கு வாய்ப்புக் கொடுக்காததை போல தனது படத்தில் ஷங்கர் மகனுக்கும் வாய்ப்புக் கொடுத்து அறிமுகப்படுத்த மாட்டார் என்றே தெரிகிறது. சொந்த தயாரிப்பில் மகனை வைத்து படம் எடுப்பாரா? என்றும் இல்லை அப்பாவை போல இயக்குநராக போகிறாரா? ஏன் இந்த குழப்பம் என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் பலர் எழுப்பி வருகின்றனர்.


 

Share this story