மிரட்டல் லுக்கில் சண்முகபாண்டியன்... விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஃப்ர்ஸ்ட் லுக் !

shanmugapandian
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் இளம் நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.  ‘மதுரை வீரன்’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவர், புதிய ஆக்ஷன் படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில்  சண்முகபாண்டியன் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

shanmugapandian

‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய இயக்கிய U அன்பு எழுதிய கதையை அவரே இயக்குகிறார். ‘நட்பே துணை’ படத்தின் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.  காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகிறது. புதிமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரள காடுகளில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ஒரிசா மற்றும் தாய்லாந்து காடுகளில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. யானையின் பின்னணியில் உருவாகும் அந்த படத்திற்கு ‘படை தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சண்முகபாண்டியன் மிரட்டலாக லுக்கில் இருக்கும் அந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story