அப்பாவைப் போல முருங்கைக்காய் சமாச்சாரத்தை கையிலெடுத்த சாந்தனு!
‘முந்தானை முடிச்சு’ படத்துல முருங்கைக்காய் தான் மெயின் சமாச்சாரமே! அந்த படம் வந்த பிறகு நிறைய இளைஞர்கள் முருங்கைக்காயை கிலோ கணக்கில் வாங்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். தற்போது அதே சமாச்சாரத்தை பாக்யராஜின் மகன் சாந்தனு கையிலெடுத்திருக்கிறார். ஆம், சாந்தனு அடுத்து ‘முருங்கைகாய் சிப்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யாரவி, பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீஜர் என்பவர் படத்தை இயக்குகிறார். படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் ராஜசேகர் தயாரிக்கிறார்.
இந்த சமாச்சாரம் is going to be crazy fun?Here’s d 1st look of #MurungaikkaiChips
Wid @AthulyaOfficial @ungalKBhagyaraj @yogibabu_offl @manobalam @reshupasupuleti @ActorMadhumitha &others
Dir @Srijar1
Music-my fav @dharankumar_c HBD to producer #Ravindran bro?#Firstman pic.twitter.com/aAYV76u4w1— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) July 8, 2020
முருங்கைகாய் சிப்ஸ் கண்டிப்பாக அடல்ட் காமெடி கன்டென்ட் உள்ள ப’டமாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பதிவிட்ட சாந்தனு “ இந்த சமாச்சாரம் ரொம்ப வேடிக்கையாக இருக்குபோது” என்று தெரிவித்துள்ளார்.
முருங்கைக்காய் சமாச்சாரம் இந்த காலத்திற்கு எடுபடுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்!