துபாயில் நடைபெற்ற 'இராவண கோட்டம்' ஆடியோ லாஞ்ச்... ரசிகர்கள் உற்சாகம் !

சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள 'இராவண கோட்டம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இயக்குனர் பாக்யராஜின் மகனான இவர், கடைசியாக 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 'வானம் கொட்டட்டும்', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் சாந்தனுவின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.
இதையடுத்து தற்போது 'இராவண கோட்டம்' படத்தில் நடித்து வருகிறார். 'மதயானைக் கூட்டம்' படம் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல்முறைகளை அழுத்தமாக பதிவு செய்த அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்திலும், 'கயல்' ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நேற்று துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அங்குள்ள தமிழர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.