‘இராவண கோட்டம்’ படத்திற்கு எதிர்ப்பு.. திட்டமிட்டபடி வெளியாகுமா ?

Raavana Kottam

இராவணக்கோட்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இளம் நடிகரான சாந்தனுவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராவணகோட்டம்’. இந்த படத்தை  'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் பிரபலமான விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.  கேஆர்ஜி குரூப்ஸ் ஆப் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

Raavana Kottam

இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேசு நாடார் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் வழங்கப்பட்டுள்ளது. அதில் பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி நடைபெற்றபோது சீமை கருவேல மர அரசியல், முதுகுளத்தூர் கலவரம் நடைபெற்றது போல் காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அதனால் இந்த படத்தை அரசு தடை செய்யவேண்டும். அதோடு தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சாதி வன்மத்துடன் எடுக்கப்பட்டுள்ள ராவண கோட்டம் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

Share this story